For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இப்போது தேர்தல் நடந்தால்.. அதிமுகவின் 2 பிரிவுகளும் மண்ணைக் கவ்வும்.. ஒன்இந்தியா சர்வே

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டிருந்தோம். அதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் நமது வாசகர்களிடையே சுத்தமாக ஆதரவு கிடைக்கவில்லை.

தமிழக அரசியல் நிலைமை பெரும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர். ஆளும் கட்சி அதன் பிரச்சினை குறித்தே அதிக கவலையுடன் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதில் கிடைத்த முடிவுகள் இதோ:

இப்போது தேர்தல் நடந்தால்

இப்போது தேர்தல் நடந்தால்

தமிழகத்தில் இப்போது தேர்தல் நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 42,605. இதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் கிடைத்த ஆதரவுதான் அதிர வைக்கிறது.

அதிமுக அம்மா படுமோசம்

அதிமுக அம்மா படுமோசம்

சசிகலாவை பொதுச் செயலாளராக கொண்ட அதிமுக அம்மா கட்சிக்கு வெறும் 2 சதவீத வாக்குகளே. கிடைத்துள்ளன. அதாவது வெறும் 850 வாக்குகளே கிடைத்துள்ளது.

இரட்டை இலையுடன் கூடிய அதிமுக மோசம்

இரட்டை இலையுடன் கூடிய அதிமுக மோசம்

இரட்டை இலையுடன் கூடிய அதிமுகவுக்கு, அதாவது அதிமுக ஒருங்கிணைந்தால் அக்கட்சிக்கு வாக்களிப்போர் எனக் கூறியோர் வெறும் 2.28 சதவீதம் பேர்தான். அதாவது 971 வாக்குகள் கிடைத்துள்ளன.

அதிமுக புரட்சித் தலைவி அம்மா சுமார்

அதிமுக புரட்சித் தலைவி அம்மா சுமார்

அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சிக்கு அதாவது ஓ.பி.எஸ் அணிக்கு வாக்களிப்போம் எனக் கூறியோர் 6.94 சதவீதம் பேர். அதாவது 2948 வாக்குகள் கிடைத்துள்ளன.

ஓ.பி.எஸ்ஸுக்கே தொண்டர்கள் ஆதரவு

ஓ.பி.எஸ்ஸுக்கே தொண்டர்கள் ஆதரவு

இதை வைத்துப் பார்க்கும்போது ஓ.பி.எஸ் தலைமையிலான அணிக்கே தொண்டர்களின் ஆதரவு இருப்பதாக உணர முடிகிறது.

English summary
Oneindia Tamil opinion survey has revealed that ADMk's two factions will face a big defeat if polls are conducted to Assembly in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X