For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் நான்காண்டு ஆட்சியில் சாதனையில்லை, வேதனைதான்: மு.க.ஸ்டாலின்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நான்காண்டுகால அதிமுக ஆட்சி மக்களுக்கு வேதனைகளும், வலிகளும் நிரம்பியதாக இருக்கிறது என்று திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதிக்கு ஜூன் 8ஆம் தேதி திருமணம் நடக்கவுள்ளது. தனது தம்பி மகனின் திருமணத்துக்காக தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கிறார். காங்கிரஸ், பாஜக, தலைவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்கினார்.

மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, திமுக வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அண்ணா நகர் சாந்தி காலனியில் வைகோ வீட்டுக்கு சென்றனர். வைகோவும் ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடம் நீடித்தது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு அழைப்பு

திருமணத்திற்கு அழைப்பு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் , "திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக எல்லா கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறேன். அந்த அடிப்படையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளேன் என்றார்.

சாதனையில்லை வேதனைதான்

சாதனையில்லை வேதனைதான்

அதிமுகவின் 4 ஆண்டு ஆட்சி குறித்து கேட்கிறீர்கள். வேதனை, சோதனை நிறைந்த ஆட்சியாக உள்ளது. இந்த 4 ஆண்டுகளில் சாதனை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை.

ஓரணியில் எதிர்கட்சிகள்

ஓரணியில் எதிர்கட்சிகள்

எல்லா துறைகளிலும் ஊழல் உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளது. அது தேர்தல் நேரத்தில் தெரியும் என்றார் மு.க.ஸ்டாலின்

மகிழ்ச்சியான சந்திப்பு

மகிழ்ச்சியான சந்திப்பு

இதனிடையே, மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து வைகோ கூறும்போது, "நாங்கள் பல ஆண்டுகள் ஒன்றாக இருந்துள்ளோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சியான ஒன்று. திருமண விழாவில் நிச்சயம் கலந்து கொள்வேன்" என்றார்.

கண்கள் பணிக்க… இதயம் இனித்தது

கண்கள் பணிக்க… இதயம் இனித்தது

வைகோவும்,மு.க.ஸ்டாலினும் டாக்டர் ராமதாஸ் வீட்டு திருமணத்தில் சந்தித்து பேசினர். அப்போதே திமுக, மதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. அதனை அப்போது வைகோ மறுத்தார். இந்த நிலையில் தன் சகோதரரின் வீட்டு திருமணத்தை முன்னிட்டு அனைத்து அரசியல்கட்சித்தலைவர்களையும் சந்தித்து 2016 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அச்சாரம் போட்டு வருகிறார் மு.க. ஸ்டாலின்.

English summary
AIADMK Government completing four years in office, Stalin took a dig at the AIADMK saying there was nothing worth to mention, as people faced only "worries" and "pains".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X