இதுக்கெல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்ல.. தம்பிதுரை அசால்ட்!!!
சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர்: சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அழகிரி பேரணி குறித்த செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர், அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. திமுகவிற்கும் பாரதிய ஜனதாவிற்கும் ஒரு கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது என குற்றம்சாட்டினார்.

பாஜக மீது விளாசல்
இந்நிலையில் அதிமுக எம்பி தம்பிதுரை கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக அரசை சரமாரியாக விளாசினார்.

பெட்ரோல் டீசல் விலை
அவர் பேசியதாவது, காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தவறான கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

அச்சுறுத்தலுக்கு பயப்படாது
மத்திய அரசை தொடர்பு கொண்டு ஆட்சியை கவிழ்க்க திமுக திட்டம் தீட்டி வருகிறது. சிபிஐ, வருமானவரி சோதனை போன்ற அச்சுறுத்தல்களுக்கு அதிமுக அரசு பயப்படாது.

திமுகவுடன் கூட்டணி
ஆளுங்கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என சோதனைகள் நடப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. தமிழக பாஜக தலைவர்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன.

தலைவர்களிடையே உடன்பாடு
ரெய்டுகளுக்கு காரணம் திமுகதான். திமுக - பாஜக தலைவர்களிடையே ஏற்பட்ட உடன்பாடே காரணம். இவ்வாறு தம்பிதுரை குற்றம்சாட்டினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications