ஓபிஎஸ் கவனத்திற்கு.. "சின்னம்மா" குடும்பம் இல்லாமல் அதிமுகவே கிடையாதாம்.. ரித்தீஷ் சொல்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இல்லாமல் அதிமுக என்பது இல்லவே இல்லை என்று முன்னாள் எம்பி ரித்திஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்களின் எதிர்ப்பையடுத்து கட்சியின் ஒற்றமைக்காகவும் தன்னால் கட்சி பலவீனப்படுத்தப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் ஒதுங்கக் கொள்வதாக துணை பொதுச் செயலாளராக இருந்த தினகரன் நேற்று கூறினார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் மீடியாக்களிடம் எதிர் அணியினரை வசை பாடிவருகின்றனர்.

ADMK is nothing without sasi and dinakaran his supporter rithish saying this

இந்நிலையில் இன்று டிடிவி தினகரனை ரித்திஷ் சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவிற்கு மட்டுமே அவரது அணுகுமுறைகள் தெரியும்.

கட்சியையும் ஆட்சியையும் கட்டுக் கோப்பாக கொண்டு செல்ல சசிகலாவும் அவர் குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தினகரனும் கட்சிக்கு மிகவும்அவசியம். சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே கட்சியை நன்றாக வழிநடத்தி செல்ல முடியும் என்றார்.

வக்காலத்தாம்!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV dinakaran in the main root in admk - Ex M.P. Rithish
Please Wait while comments are loading...