அதிமுக இப்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது தெரியுமா? கே.பி.முனுசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக தற்போது திவாகரன் கட்டுப்பாட்டில் உள்ளது என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். போயஸ் இல்லமும் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் ஓபிஎஸ் அணியினர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி, சசிகலா சிறைக்கு சென்றபின் கட்சி டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ADMK is now under the control of Divakaran:KP Munusamy

அவரும் சிறைக்கு சென்ற கட்சி தற்போது திவாகரனின் கட்டுப்பாட்டில் உள்ளது. போயஸ் இல்லமும் தற்போது சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுவே இரு அணிகள் இணைய தாமதமாவதற்கான காரணம் என்றும் அவர் கூறினார். சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கும் வரை பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
KP Munusamy said that ADMK is now under the control of Divakaran. Poes garden also under the control of Sasikala family.
Please Wait while comments are loading...