அது ப்ளூ டூத்தா?... ப்ளூ டிக்கா?.. பாவம் அதிமுக அமைச்சரே கன்பியூஸ் ஆகிட்டாரு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அமைச்சர் மணிகண்டன் ப்ளூ டூத் மற்றும் ப்ளூ டிக் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் சட்டசபையில் பேசி இருக்கிறார். டிவிட்டர் ப்ளூ டிக் குறித்த கேள்விக்கு அவர் ப்ளூ டூத் குறித்து பதில் அளித்து இருக்கிறார்.

தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அவைக்கு தினகரன் செல்வது, ஓகி புயல், போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனை என தினமும் அவை அனல் பறக்கிறது.

ADMK Minister confuses over Bluetick and Bluetooth in assembly

இந்த நிலையில் இன்று அவையில் மிக சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அதிமுக எம்.எல்.ஏ செம்மலை முதலில் ப்ளூவேல் விளையாட்டு குறித்து கேள்வி எழுப்பினார். இளைஞர்களை கொல்லும் ப்ளூ வேல் விளையாட்டிற்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் ''இந்த விளையாட்டு ரஷ்யாவில் உருவாக்கபட்டது. தற்போது மத்திய அரசு இதற்கு எதிராக எல்லா நடவடிக்கையும் எடுத்துவிட்டது. ப்ளூவேல் விளையாட்டு குறித்து இனி அச்சப்பட தேவையில்லை'' என்று கூறினார்.

இதற்கு அடுத்து டிவிட்டரில் இருக்கும் ப்ளூ டிக் குறித்து செம்மலை கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மணிகண்டன் ப்ளூ டிக்கிற்கு பதிலாக ப்ளூ டூத் குறித்து பெரிய விளக்கம் கொடுத்தார்.

இதனால் அவையில் சில நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, மற்றும் திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் ஆகியோர் மணிகண்டனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருக்கு ப்ளூ டிக் குறித்து கூட தெரியாதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
First Session of the Tamil Nadu Legislative Assembly started on Jan 8. ADMK Minister Manikandan confuses over Bluetick and Bluetooth in assembly. In Order to explain about the blue tick in twitter he explained about the bluetooth. Vijaya Dharani and Anbil Mahesh criticized Manikandan for his statement.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற