For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லோரும் காலைக் காட்டுங்க.. விழுந்து விழுந்து ஓட்டுக் கேட்ட அதிமுக எம்.எல்.ஏ!

|

கரூர்: முதல்ர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு அதிமுகவை ஜெயிக்க வையுங்கள் என்ற கோரிக்கையுடன் பொதுமக்களின் கையைப் பிடித்தும், காலில் விழுந்தும், அக்கறையுடன் விசாரித்தும் வாக்கு சேகரித்தார் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. காமராஜ்.

கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.காமராஜின் இந்த நூதன ஓட்டுவேட்டையால் அர் பிரசாரம் போன இடமெல்லாம் கலகலப்பானது.

கரூர் தொகுதி வேட்பாளர் மு.தம்பித்துரை ஜெயிக்க வேண்டும் முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டுமென்று கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகத்தார்.

ஒருவரையும் விடாமல்

ஒருவரையும் விடாமல்

அப்போது முதிய பெண்மணிகளிடமும், பெட்டிகடைகாரர், இனிப்பு வியாபாரிகள், டீ கடைகாரர்களிடமும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளிடமும் வாக்குகள் சேகரித்தார்.

நடந்தே போய் வாக்கு வேட்டை

நடந்தே போய் வாக்கு வேட்டை

அப்போது அனைத்து பகுதிகளுக்கும் நடந்தே சென்று வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ விற்கு அப்பகுதி பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அம்மா தீர்த்து வைப்பார் என்று உறுதி

அம்மா தீர்த்து வைப்பார் என்று உறுதி

மேலும் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்ட நமது முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்திற்கு தேவையான நதிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைப்பதோடு, காவிரி நீர் பிரச்சினையும் தீர்த்து வைப்பார் என்று உறுதி அளித்தார் காமராஜ்.

மின்பற்றாக்குறையையும் தீர்ப்பார்

மின்பற்றாக்குறையையும் தீர்ப்பார்

மேலும், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்தையும் அதிகப்படுத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

அக்கறையுடன் விசாரிப்பு

அக்கறையுடன் விசாரிப்பு

எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் பணிவாகப் பேசி, அக்கறையுடன் விசாரித்து, நயமாக கோரிக்கை வைத்த காமராஜின் பிரசார பாணி அனைவரையும் கவர்ந்தது.

English summary
Krishnarayapuram ADMK MLA Kamaraj's novel campaign in support of Karur candidate Thambidhurai attracted the people in his constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X