சசிகலா, தினகரன் நீக்கப்படுவார்களா?.. செப் 12ல் கூடுகிறது அதிமுக பொதுக் குழு!
தொண்டர்களால் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி கூடவுள்ளது.
சென்னை: சசிகலா, தினகரனை நீக்குவதற்கு வகை செய்யும் அதிமுகவின் பொதுக் குழு கூட்டம் செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் கூடுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
கட்சி விதிகளின்படி பொதுக் குழு உறுப்பினர்களை கூட்டி சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. எனவே நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு உள்ளது. இதன் தீர்ப்பு எப்போது வரும் என்று தெரியவில்லை

தினகரன் ஆட்டம்
இந்நிலையில் பிரிந்திருந்த இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டன. இதனால் கட்சி தன் கையைவிட்டு போய்விடக் கூடாது என்பதில் தினகரன் தீவிரமாக செயல்படுகிறார். அவர் பங்குக்கு ஆதரவாளர்களை திரட்டி எடப்பாடிக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்.

பொதுக் குழுதான் தீர்வு
தினகரன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பதாகும். அதை செய்ய பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பது எடப்பாடியாரின் திட்டமாகும். இதனால் நேற்று அதிமுக எம்எல்ஏ-க்கள், எம்பிக்களை அவசர அவசரமாக கூட்டினார்.

ஆலோசனை
அந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுக் குழு கூட்டுவதும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக் குழு கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறவுள்ளது.

எங்கே கூடுகிறது?
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செப்டம்பர் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. அதிமுகவில் 2,780 பொதுக்குழு உறுப்பினர்களும், 250 செயற்குழு உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பக்கம் இருப்பதால், செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட முடிவு செய்து உள்ளனர்.
Recommended Video


அதிமுக விதி என்ன?
அதிமுக விதிப்படி பொதுக் குழு கூட்டுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இதனால் இரவோடு உறுப்பினர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சசிகலா, தினகரன் ஆகியோரை நீக்குவது தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications