அப்போ பலாத்காரம் செய்தால் டபுள் ப்ரோமோஷனா பாஸ்?.. கொந்தளிக்கும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண்ணின் காதில் அறைந்து அவரை செவிடாக்கி சர்ச்சைக்குள்ளான ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

அப்போது ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணை ஓங்கி அறைந்தார். இதில் அப்பெண்ணின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

மக்கள் கொந்தளிப்பு

மக்கள் கொந்தளிப்பு

இந்நிலையில் பாண்டியராஜனுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளது. தமிழக அரசு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நமது வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பு:

இந்த ஆட்சி வீழும்

இந்த ஆட்சி வீழும்

கபீர் அகமது என்ற வாசகர் கூறியிருப்பதாவது, பெண்களை கீழ்த்தரமாக நடத்தி மேலும் பெண் மீது வன்முறை நடத்திய காவல் துறையின் அதிகாரிக்கு பதவி உயர்வா? என்ன அநியாயம் நடக்குது தமிழ் நாட்டில்? பெண்கள் நம் அன்னையர்கள், பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் ஆட்சி ஒருநாளும் வெளங்காது. மிக விரைவில் இந்த ஆட்சி வீழும் எனக் கூறியுள்ளார்.

டபுள் புரோமோஷனா?

டபுள் புரோமோஷனா?

ஸ்ரீனிவாசன் என்பவர் அப்போ பலாத்காரம் செய்தால் டபுள் புரோமோஷனா பாஸ் எனக் கேட்டுள்ளார்? அடித்தவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் சட்டம் வாழ்க

அரசியல் சட்டம் வாழ்க

முகமது இக்சான் என்பவர் கூறியிருப்பதாவது, பொது மக்களுக்கு சிறந்த பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டிய காவல்துறைக்கு பெண்களை அடிப்பதற்கு பதவி உயர்வு. இந்திய அரசியல் சட்டம் வாழ்க எனக் கூறியுள்ளார்.

சுலபமா முடிச்சு கொடுத்ததால்

சுலபமா முடிச்சு கொடுத்ததால்

ஷாகின் என்பவர், அரசு குடுத்த வேலைய சுலபமா முடிச்சு கொடுத்ததால் கிடைத்த பரிசு என தெரிவித்துள்ளார். பெண்களைத் தாக்கியதால் அரசு இந்தப் பரிசை அவருக்கு கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

என்ன கொடுமைலாம் பார்க்கனுமோ..

என்ன கொடுமைலாம் பார்க்கனுமோ..

தமிழக விவசாயி என்ற பெயரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இன்னும் என்ன என்ன கொடுமைலாம் பாக்க வேண்டி இருக்கோ..? எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஒரு அறிவிப்பு

தமிழக அரசு ஒரு அறிவிப்பு

ஜெயக்குமார் என்பவர், தமிழக அரசு ஒரு அறிவிப்பு, டாஸ்மாக்கு எதிராக போராட்டம் செய்யும் பெண்களை அடித்தால் பதவி உயர்வு என விளம்பரம் செய்வதாக நக்கலடித்துள்ளார்.

சன்மானமும் இவருக்கு தருவார்கள்

என்எஸ்கே என்பவர் தெரிவித்துள்ள கருத்தில், மக்களிடமிருந்து அரசியல் வாதிகளை காப்பாற்றவே போலீஸ் தவிர
மக்களை காப்பாற்ற அல்ல. இதனால் தான் இவருக்கு பதவி உயர்வு. இது தவிர சன்மானமும் இவருக்கு தருவார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

என்னம்மா அறையறாரு

என்னம்மா அறையறாரு

கும்கி என்ற பெயரில் தெரிவித்திருக்கும் கருத்தில் அதுதாண்டா போலீசு. என்னம்மா அறையறாரு. அதுக்குதான் பதவி உயர்வு என தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADSP Pandiyan gets promotion as DSP. He only slped the woman who was protesting against tasmac. One India Tamil Readers opposing for his promotion.
Please Wait while comments are loading...