For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தில் 570 மெகாவாட் மின் உற்பத்தி உண்மைதானா? சுப. உதயகுமார் கேள்வி

By Mathi
Google Oneindia Tamil News

AERB allowed to increase output in Kudankulam? : SP Udayakumar
நெல்லை: கூடங்குளம் அணு உலையில் இருந்து 570 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுவதாக கூறப்படுவது குறித்து அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கூடங்குளத்தில் மின் உற்பத்தி 570 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது என்று அதன் இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்திருந்தார். இது குறித்து சந்தேகம் தெரிவித்து சுப. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ந் தேதியன்று 500 மெகாவாட் மின் உற்பத்திக்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

இந்த அனுமதி ஜனவரி 31-ந் தேதி வரைக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த டிசம்பர் 11-13 வரை கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின் உற்பத்தி அதிகரிப்புகு அனுமதி கொடுக்கப்பட்டதாக இயக்குநர் சுந்தர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக எந்த ஒரு தகவலுமே அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை. அப்படியானால் இந்த மின் உற்பத்தி அதிகரிப்புக்கு எப்போது அனுமதி கொடுக்கப்பட்டது? வாய்மொழி மூலம் அனுமதி கொடுக்கப்பட்டதா? அல்லது நாட்டு மக்களுக்கு தவறான தகவலை தெரிவித்து எங்கள் வாழ்வோடு விளையாடுகிறாரா இயக்குநர்? நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார்.

English summary
People's Movement Against Nuclear Energy has questioned the Kudankulam Project Station Director Mr. R. S. Sundar's announcement of they have produced 570 MW.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X