காலத்தின் கோலம்.. தமிழகத்தை தாங்கி பிடிக்க சூளுரைத்த விஜயகாந்த் கைத்தாங்கலாக வந்ததை கவனித்தீர்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கீழடி: கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவின் கைகளை பிடித்தவாரு கைத்தாங்கலாகவே நடந்த வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே தமிழக அரசியல் தலைவர்களுக்கு போதாத காலமாகத்தான் உள்ளது. செப்டம்பரில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 72 நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் மாதத்தில் மரணமடைந்தார். திமுக தலைவர் கருணாநிதியும் ட்ரக்கியோஸ்டமி அறுவை சிகிச்சை செய்து கொண்டு அவருக்கு தற்போது பேச்சு பயிற்றி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு அடுத்தபடியாக அரசியல்தலைவர்களில் முக்கியமானவராக பார்க்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் டிசம்பர் மாதம் முதல் உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டதால், தமிழக அரசியலில் அவரது குரலும் குறைந்து போனது. விஜயகாந்த் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் சிங்கப்பூர் சென்று சிசிச்சை எடுத்துக் கொள்ள உள்ளதாகவும் ஆனால் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு இல்லாததால் இங்கேயே சிகிச்சை பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

கண்ணாக பார்த்துக் கொள்ளும் பிரேமலதா

கண்ணாக பார்த்துக் கொள்ளும் பிரேமலதா

சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விஜயகாந்த் தற்போது உடல்நிலை தேறி வருவதாக சொல்லப்படுகிறது. அவரின் உடல்நிலை முன்னேறி வருவதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறாராம் மனைவி பிரேமலதா. கடந்த மே மாதம் உழைப்பாளர் தினத்தின் போது நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரேமலதா, விஜயகாந்த் உடல்நிலை பற்றி யாராவது கேட்டால் அவர் கன்னத்திலேயே ஒரு அறை விடுங்கள் என்று பேசியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்த ஆண்டு விஜயகாந்த் தோன்றிய முதல் மேடை நிகழ்ச்சி அதுவே.

மிஸ்ஸிங் வாய்ஸ்

மிஸ்ஸிங் வாய்ஸ்

ஆனால் இதுவரை விஜயகாந்த்தின் அரசியல் பேச்சில் இருக்கும் காமெடியும், கட்சியினருக்கு கொடுக்கும் நறுக் கொட்டுகளும், தடாலடி அறைகளும் மிஸ்ஸிங், இதற்குக் காரணம் அவரது உடல்நிலை ஒத்துழைப்பு அளிக்காதது என்றே சொல்லப்படுகிறது. இந்நிலையில் கீழடியில் இன்று அகழ்வார்ய்ச்சி பணிகளை பார்வையிட்ட விஜயகாந்த், செய்தியாளர்களிடம் பேசினார்.

கைத்தாங்கலாக வந்த விஜயகாந்த்

கைத்தாங்கலாக வந்த விஜயகாந்த்

விஜயகாந்த் பேசத் தொடங்கியதுமே அவரது குரலில் பழைய கம்பீரம் இல்லை என்பது தெரிந்தது, வார்த்தைகள் சற்றே குழறியபடிதான் வந்தன. எங்கு சென்றாலும் யாராவது உடன் இருக்க வேண்டிய சூழலில் தான் விஜயகாந்த் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் கீழடிக்கு வந்த போது விஜயகாந்த் பிரேமலதாவின் கைகளை கைத்தாங்கலாக பிடித்த படியே வந்தார்.

பழைய சத்ரியனாக வருவாரா?

பழைய சத்ரியனாக வருவாரா?

பேச்சு பயிற்சி, வீட்டிலேயே செய்யும் பழைய நடைபயிற்சியின் மூலம் அரசியல் பணியில் இறங்கியிருக்கும் விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலுக்குள் பழைய சத்ரியனாக திரும்பி வருவாரா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் தேமுதிக தொண்டர்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMDK president Vijayakanth's health condition is not that much improved because he doesn't walk alone and with anothers help only his mobility possible
Please Wait while comments are loading...