திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திண்டுக்கல்:மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை வைக்க கோரி போராட்டம்
திண்டுக்கல்: திருப்பரங்குன்றம் சர்ச்சை இன்னமும் ஓயாத நிலையில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற அனுமதியுடன் பெருந்திரளாக இந்து முன்னணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் பேசுபொருளானது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாநகரில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த மலைக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் பழங்கால கோவில் இன்றும் சிதிலமடைந்த நிலையில்தான் உள்ளது. அங்கு வழிபாடுகள் நடைபெறுவதும் இல்லை.
அதேநேரத்தில் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சுவாமியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதற்காக பல்வேறு போராட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டும் இருக்கின்றன.
இந்த நிலையில், திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகரின் மையப்பகுதியில் பிரதான கடைவீதியில் அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கோவில் பிரம்மாண்டமாக சீரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications