For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேல்முருகன், ஜான் பாண்டியனை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கதிரவன்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி விலகியுள்ளது.

சட்டசபை தேர்தலையொட்டி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.

After Velmurugan and John, Kathiravan too ditches ADMK alliance

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக பார்வர்டு பிளாக் கட்சி இன்று அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் ஜனநாயகம் இல்லாததால் விலகுவதாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் மற்றும் செயலாளர் தேவதாஸ் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கூட்டணியில் இருக்கிறோமா இல்லையா என்பதையே ஜெயலலிதா தெரிவிக்கவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்தார்.

5 தொகுதிகள் கேட்ட தங்களுக்கு ஒரேயொரு தொகுதியை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்கியதாகக் கூறி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்.

English summary
After Velmurugan and John Pandian, All India Forward bloc party leader Kathiravan too ditched ADMK alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X