சென்னையில் மீண்டும் கனமழை.. புறநகர் பகுதிகளில் வெளுக்கிறது..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 மணிநேரம் ஓய்ந்திருந்த மழை மீண்டும் வலுத்துள்ளது. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கனமழை வெளுத்து வருகிறது.

சென்னையில் நேற்றிரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலை 9 மணிக்குப் பிறகு சுமார் 2 மணி நேரம் மழை ஓய்ந்திருந்தது.

Again rain in most of places of Chennai

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, தி நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதேபோ வளசரவாக்கம், வடபழனி, போரூர், கிண்டி அடையாறு ஆகியப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வருகிறது.

சிட்லாப்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Again rain in most of places of Chennai. Chennai city outer also getting heavy rain due to northeast monsoon.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற