இரு கையை கூப்பி வருத்தம் தெரிவித்த அஇஅதிமுக முன்னாள் எம்எல்ஏ! முன்ஜாமீன் கிடைக்குமா?
கள்ளக்குறிச்சி: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதற்கு கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா இல்லை இந்த வழக்கே வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் வழக்கில் கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரையும், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் தன் மீது பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அரசியல் உள் நோக்கத்தோடு, தொடரப்பட்ட வழக்கு என்றும், எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி எந்த இடத்தில் மேற்கண்டவர்களை அவதூறாக பேசினாரோ அந்த இடத்தில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் தான் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நேற்றைய தினம் அதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான கூட்டம் மற்றும் மதுரை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளக்க பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று மாலை அதிமுக கூட்டம் நகரச் செயலாளர் பாபு தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ குமரகுரு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய போது உதயநிதி ஸ்டாலின் பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்துவிட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூகவலைதளங்களில் வருத்தம் தெரிவித்தேன்.
அதை பத்திரிகை தொலைகாட்சியில் வெளியிட்டுள்ளனர், நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்படுமா, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கெனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தால் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது குமரகுரு மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனவே இந்த பிரச்சினை இத்துடன் முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
உதயசூரியன் வேண்டாமா? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போங்க.. ஜவாஹிருல்லாவிற்கு திமுக எதிர்ப்பு












Click it and Unblock the Notifications