அந்தோ பரிதாபம்.. அதிமுக பொதுக்குழுவில் "நாற்காலி"யை இழந்தார் ஜெயலலிதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அதிமுக பொதுக்குழுவில் "நாற்காலி"யை இழந்தார் ஜெயலலிதா!-வீடியோ

சென்னை: ஜெயலலிதா அதிமுக பொதுக்குழு கூட்டம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நாற்காலி இம்முறை மேடையில் வைக்கப்படவில்லை.

ஜெயலலிதா படத்திற்கும், எம்ஜிஆர் படத்திற்கும் மலர் தூவிய போது காப்போம் காப்போம் கட்சியை காப்போம் என பொதுக்குழுவில் முழக்கமிட்டனர்.

மறைந்த கட்சிப்பிரமுகர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் இரங்கல் தீர்மானம் வாசித்தார். முன்னாள் எம்.பி., ரபி பெர்னாட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தை அமைச்சர் உதயகுமார் வாசித்தார்.

ஜெயலலிதாவுக்கு உரிய மரியாதை

ஜெயலலிதாவுக்கு உரிய மரியாதை

முன்பெல்லாம் ஜெயலலிதாவுக்குரிய மரியாதை கிடைத்து வந்தது. தற்போது அது புகைப்பட அளவுக்கு மாறி விட்டது என்பதை இந்தக் கூட்டம் நிரூபிப்பதாக உள்ளது.

9 மாதத்திற்கு முன்பு

9 மாதத்திற்கு முன்பு

கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அதில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில்தான் சசிகலா பின்னர் அமர்ந்தார்.

நாற்காலி காலி!

நாற்காலி காலி!

சசிகலா அமர்ந்தார் என்ற காரணத்தால் தற்போது அந்த நாற்காலிக்கு குட்பை சொல்லி விட்டனர். எனவேதான் இன்று கூட்டத்தில் நாற்காலி எதுவும் வைக்கப்படவில்லை.

இனிமேல் போட்டோ மட்டுமே

இனிமேல் போட்டோ மட்டுமே

இதன் மூலம் காலி நாற்காலியையும் இழந்துள்ளார் ஜெயலலிதா. இனிமேல் அண்ணா, எம்ஜிஆர் போல ஜெயலலிதாவும் புகைப்பட அளவோடு நிறுத்தப்படுவார் என்றே தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former AIADMK supremo Jayalalithaa chair is missing the party general council meet Chennai today, but MGR and Jayalalithaa photo wat kept and floral tributes paid
Please Wait while comments are loading...