லோக்சபா தேர்தல்: 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவி்ததார் ஜெ. -தொகுதி பங்கீட்டுக்கு பின் மாறும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளுக்குமான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளன. இந்த இரு கட்சிகளுக்குமான தொகுதிகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தமது பிறந்த நாளான இன்று 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார் ஜெயலலிதா. அதிமுக தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வேட்பாளர்கள் பெயர்களை ஜெயலலிதா அறிவித்தார்.

AIADMK releases list of candidates

இந்த வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலானோர் புதுமுகங்களாக இருக்கின்றனர். ஜெயலலிதா அறிவித்த 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம்

1. திருவள்ளூர் (தனி)- டாக்டர் . வேணுகோபால் (மருத்துவ அணிச் செயலாளர் - மக்களவை குழுச் செயலாளர்)

2. சென்னை வடக்கு - வெங்கடேஷ் பாபு, (வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர்)

3. சென்னை தெற்கு- டாக்டர் து. ஜெயவர்தன்,

4. மத்திய சென்னை - விஜயகுமார், (மாணவர் அணிச் செயலாளர், சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர்)

5. ஸ்ரீபெரும்புதூர் - இராமச்சந்திரன்(காஞ்சிபுரம் மத்திய மாவட்ட அவைத் தலைவர்)

6. காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல் (திருப்போரூர் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)

7. அரக்கோணம் - திருத்தணி கோ. அரி ( திருவள்ளூர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)

8. வேலூர் - பா. செங்குட்டுவன், (வேலூர் புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)

9. கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார் (கிருஷ்ணகிரி மாவட்டக் அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்)

10. தருமபுரி - மோகன் (தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்)

11. திருவண்ணாமலை- சு. வனரோஜா, (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்)

12. ஆரணி- செஞ்சி சேவல் வெ. ஏழுமலை (விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)

13. விழுப்புரம் (தனி) - எஸ். இராஜேந்திரன் (விழுப்புரம் வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு 29-ஆவது வார்டு உறுப்பினர்)

14. கள்ளக்குறிச்சி - டாக்டர் க. காமராஜ் (விழுப்புரம் தெற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்)

15. சேலம் - பன்னீர்செல்வம் (சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்)

16. நாமக்கல்- சுந்தரம், (நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு 4-ஆவது வார்டு உறுப்பினர், முன்னாள் எம்.எல்.ஏ)

17. ஈரோடு - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்)

18. திருப்பூர் - ஏ. சத்தியபாமா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர், கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)

19. நீலகிரி (தனி) - டாக்டர் கோபாலகிருஷ்ணன் (குன்னூர் நகர மன்றத் தலைவர்)

20. கோயம்புத்தூர் -நாகராஜன் (கோவை மாநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர், கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்)

21 பொள்ளாச்சி - மகேந்திரன் (திருப்பூர் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சிக் கழகச் செயலாளர், மூங்கில்தொழுவு ஊராட்சி மன்றத் தலைவர்)

22. திண்டுக்கல் - உதயகுமார் (நிலக்கோட்டை பேரூராட்சிக் கழகச் செயலாளர்)

23. கரூர் - டாக்டர் மு. தம்பிதுரை (கொள்கை பரப்புச் செயலாளர், அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மற்றும் மக்களவை குழுத் தலைவர்)

24. திருச்சிராப்பள்ளி - குமார் (இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர், அதிமுக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்)

25. பெரம்பலூர் - மருதைராஜ் (எ) மருதராஜா, (பெரம்பலூர் ஒன்றிய செயலாளர், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)

26. கடலூர்- ஆ. அருண்மொழிதேவன் (கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர், தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், முன்னாள் எம்.எல்.ஏ)

27. சிதம்பரம் (தனி) - மா. சந்திரகாசி (பெரம்பலூர் மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)

28. மயிலாடுதுறை - சு.மு. பாரதிமோகனன் (திருப்பனந்தாள் ஒன்றியக் கழகச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ)

29. நாகப்பட்டினம் (தனி) - டாக்டர் மு. கோபால் (திருவாரூர் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)

30. தஞ்சாவூர் - பரசுராமன் (தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்)

31. சிவகங்கை - செந்தில்நாதன் (சிவகங்கை மாவட்ட செயலாளர், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர்)

32. மதுரை- இரா. கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்)

33. தேனி - பார்த்திபன் (தேனி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்)

34. விருதுநகர் - ராதாகிருஷ்ணன் (விருதுநகர் மாவட்ட துணைச் செயலாளர், சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்)

35. ராமநாதபுரம்- அன்வர்ராஜா, (சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்)

36. தூத்துக்குடி - ஜெயசிங் (தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்)

37. தென்காசி (தனி) - வசந்தி முருகேசன், (திருநெல்வேலி மாநகர் மாவட்ட இணைச் செயலாளர்)

38. திருநெல்வேலி - பிரபாகரன், (ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர்)

39. கன்னியாகுமரி - ஜான் தங்கம், (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய தலைவர்)

40. புதுச்சேரி (40) - ஆ.ஏ. ஓமலிங்கம், (காரைக்கால் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ)

இறுதிப்பட்டியல் அல்ல

ஜெயலலிதா இன்று அறிவித்த வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமானதாக இருந்தாலும் இறுதிப் பட்டியல் இதுவாக இருக்காது. அவரே கூறியிருப்பது போல இடதுசாரிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் அந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர்.

அத்துடன் தற்போதைய வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்களையும் ஜெயலலிதா செய்யக் கூடும். அண்மையில் ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தார் ஜெயலலிதா. அதில் சின்னதுரை பெயர் இடம்பெற்றிருந்தது.

ஆனால் அவர் மீது ஊழல் புகார் இருந்ததால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னதுரை கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அதனால் தற்போதைய வேட்பாளர் பட்டியலே இறுதியானதாக இருக்காது. சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+