அஜித் நடித்த விவேகம் திரைப்படம் ஆக. 24ம் தேதி ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் நடித்த விவேகம் திரைப்பட ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகிறது. இன்று படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில் பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் பெரும்பாலும் வெளிநாடுகளில் சூட்டிங் எடுக்கப்பட்ட திரைப்படம் விவேகம். அஜித்தின் அபாரமான ஸ்டில்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.

 Ajith's Vivegam Movie Release date is postponed to August 24

சூப்பர் ஹிட்டான 'வேதாளம்' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதே இயக்குநர் கைவண்ணத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் விவேகம் என்பது எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. அஜித்தை 2 வருடங்கள் கழித்து வெள்ளி திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆக. 10ம் தேதி விவேகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ஒரு தகவல் வேகமாக பரவி வந்தநிலையில், படம் ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீசாகும் என்று சிவா டிவிட்டரில் இன்று மாலை அறிவித்தார்.

ஆகஸ்ட் 24ம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Ajith's Vivegam Movie Release date is postponed to August 24. Earlier it was scheduled to release on Aug. 10.
Please Wait while comments are loading...