அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு திடீர் ஒத்திவைப்பு !
அலங்காநல்லூர், பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை: அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ஆம் தேதியும், பாலமேட்டில் பிப்ரவரி 2-ஆம் தேதியும் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்த பின் ஜல்லிக்கட்டுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. கடைசியாக 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டும் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்ததால் பொங்கல் பண்டிகை நாட்களில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சிகள் மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க போலீஸார் அங்குள்ள வாடிவாசலுக்கு 'சீல்' வைத்தனர். இதனால் வெகுண்டெழுந்த மாணவர்கள், இளைஞர்கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக் கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் மறுநாள் ஜன. 17-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டம் ஒரு வாரகாலத்திற்கு மேலாக நடைபெற்றது.
மாணவர்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு பணிந்தது. அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த இருந்த தடை விலகியதால்,வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி அலங்காநல்லூரிலும்,பிப்ரவரி 2-ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக இரு கிராமங்களின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை இரண்டு கிராம மக்களும் தனித்தனியாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரும் 30-ஆம் தேதி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பின்னர் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் தேதி மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications