கோவையில் இருந்து நேபாளத்துக்கு யாத்திரை சென்ற 40 பேர் நிலை என்ன? பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியீடு

Subscribe to Oneindia Tamil

காத்மண்டு: கோவை மாவட்டத்தில் இருந்து நேபாளத்துக்கு யாத்திரை சென்ற 40 பேரும் பத்திரமாக உள்ளனர். கோவையிலிருந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி 40 பேர் அடங்கிய குழுவினர் நேபாளம் கைலாசா யாத்திரைக்கு சென்றுள்ளனர். கோவை குழுவில் இருந்த சுவாமிநாதன், தாங்கள் 40 பேரும் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

திபெத்தின் இமயமலை பகுதியில் கடந்த 26 ஆம் தேதி மிகப்பெரிய பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், நேபாளத்தை தாக்கியது. அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் பாறைகள், மரங்கள் அசுர வேகத்தில் பாய்ந்ததில் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மாயமாகினர்.

All 40 Coimbatore Pilgrims in Nepal Confirmed Safe

கும்பகோணம் பகுதியில் இருந்து நேபாளத்துக்கு 57 பேர் சுற்றுலா சென்ற நிலையில், அந்த குழுவினர் சென்ற 2 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கின. நேபாள வெள்ளத்தில் தப்பிய 21 பேர் நேற்று மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பி உள்ளனர். அந்தக் குழுவில் சென்ற மற்ற நபர்களின் நிலை குறித்து இன்னும் தெரியாத சூழலே உள்ளது.

கோவையிலிருந்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி 40 பேர் அடங்கிய குழுவினர் நேபாளம் கைலாசா யாத்திரைக்கு சென்றுள்ளனர். கோவையில் இருந்து ஐடியல் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் அவர்கள் நேபாளத்துக்குச் சென்றனர். அவர்கள் எங்கு உள்ளனர், என்ன ஆனார்கள் எனத் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கோவை குழுவில் இருந்த சுவாமிநாதன், தாங்கள் 40 பேரும் பத்திரமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

"கோவையில் இருந்து சென்ற 40 பேரும் நலமாக உள்ளோம். 3 நாட்களுக்கு முன் பாதிப்பு நடந்த பகுதியில் இருந்தோம். நேபாளத்தில் காத்மண்டுவுக்கு பயணித்து வருகிறோம். எங்களுக்கு பாதிப்பு இல்லை. நலமாக உள்ளோம். தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+