காத்தாடும் அம்மா உணவகங்கள்... உணவு சரியில்லை... பொதுமக்கள் பகீர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களில் அம்மா உணவகம் இப்போது தரமற்ற உணவகமாக மாறி, ஏழை வாடிக்கையாளர்கள் வயிற்றை பதம் பார்க்கும் நிலையில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. உணவு சரியில்லை என்பதால் கூட்டம் குறைந்து அம்மா உணவகங்கள் காத்தாடுகின்றன.

சென்ற 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக அளித்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டம் தான் அம்மா உணவகம். இதனை, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போதே, கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் மாநிலம் முழுக்க அம்மா உணவகம் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அம்மா உணவகத்தின் நிலை கவலைக்கிடமாக மாறிவிட்டது என்கிறார்கள் அதன் ரெகுலர் வாடிக்கையாளர்கள். ஜெயலலிதா முன்னிலையில் பாராட்டு பெறவேண்டும் என்பதற்காக விழுந்து விழுந்து வேலை செய்த எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் இன்று கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

இவ்வளவுதான் ஜெயலலிதா மீது அதிமுக பிரதிநிதிகள் வைத்துள்ள மரியாதை என்கிறார்கள் ஏழை எளிய அம்மா உணவக வாடிக்கைகையாளர்கள். சென்னையின் அம்மா உணவகங்களில் இப்போதெல்லாம், இட்லிக்கு சட்னியில்லை, சாம்பார் சாதத்திற்கு ஊறுகாய் கூட இல்லை என்கிற நிலைதான் இருக்கிறது.

 மருத்துவமனைகளில் அம்மா உணவகம்

மருத்துவமனைகளில் அம்மா உணவகம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கஸ்தூரிபா அரசு தாய்-சேய் நல மருத்துவமனை, அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை என்று முக்கிய மருத்துவ மனைகளில், அம்மா உணவகங்கள் உள்ளன.

 சென்னையைச் சுற்றி 407

சென்னையைச் சுற்றி 407

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகளில் உள்ள 7 அம்மா உணவகங்களும் சேர்த்து மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நுங்கம்பாக்கத்தில் மட்டும் அதிகபட்சமாக 38 அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன.

 3 லட்சம் இட்லிகள் விற்பனை

3 லட்சம் இட்லிகள் விற்பனை

நாள்தோறும், சராசரியாக 3 லட்சம் இட்லிகளும், 29 ஆயிரம் பொங்கல், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலவை சாதம், 2 லட்சம் சப்பாத்திகளும் தயாரிக்கப்பட்டு அம்மா உணவகம் மூலம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகிறது.

 ரூ.12 லட்சம் அளவுக்கு வியாபாரம்

ரூ.12 லட்சம் அளவுக்கு வியாபாரம்

அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அமுதம் கூட்டுறவு அங்காடிகள் மூலமும், காய்கறிகள் திருவல்லிக்கேணி கூட்டுறவு பண்டக சாலையில் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதே போல நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் அளவுக்கு உணவுப் பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.

 குறைந்த வாடிக்கையாளர்கள்

குறைந்த வாடிக்கையாளர்கள்

பெருநகர சென்னை மாநகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்கள் இப்போது காத்தாடுகின்றன. அங்கு வழங்கபப்டும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் அம்மா உணவகங்களில் முன்பு போல வாடிக்கையாளர்கள் வருவதில்லை.

Presidential Election ADMK will Support to Whom will be Decided Later
 புகார் அளித்தும் பயனில்லை

புகார் அளித்தும் பயனில்லை

அம்மா உணவகம் சரியில்லை, உணவில் சுவை தரமில்லை என்று புகார் அளித்தால், அதைக் கவனிக்கும் நிலையில் அதிகாரிகள் இல்லை. அவர்களை கண்காணிக்கும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளும் இல்லை. அவர்களைக் கண்காணிக்கும் நிலையில் அரசும் இல்லை. இதைஎல்லாம் பார்க்க ஜெயலலிதா இல்லை என்ற நிலைதான் இப்போதுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Govt Amma canteen business dull in Chennai, food quality is not good public complaint.
Please Wait while comments are loading...