For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமகவின் சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடலாமா?... மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம்

பாமகவின் சாதனைகளை திமுக சொந்தம் கொண்டாடுவதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அமைச்சராக தான் செய்த சாதனைகளை திமுக ஆட்சி காலத்தில் செய்யப்பட்டவை என்று சொந்தம் கொண்டாடுவதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய போது மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் அதிமுக அரசு இதனால் சாதித்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.

Anbumani condemns Stalin for claiming their achievements as DMK

பின்னர் திமுக செய்த சாதனைகள் என்று கூறி ஒரு பட்டியலை படித்தார். அதில் தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கியது, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டியாக தரம் உயர்த்தியது, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்தது ஆகியவை தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்தபோது படைக்கப்பட்ட சாதனை என்றார்.

இதற்கு பாமகவின் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்டாலின் பட்டியலிட்ட சாதனைகள் எல்லாம் திமுக ஆட்சி காலத்தில் நடந்தவை தான். ஆனால் அதை செய்தது, மத்திய அமைச்சராக இருந்த நான்தான். இந்த வரலாற்றை ஸ்டாலின் அறிந்து கொள்ள வேண்டும்.

பாமகவின் சாதனைகளை தங்கள் கட்சியின் சாதனை என்று கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது. மேலும் இது கண்டிக்கத்தக்கது. இனி ஸ்டாலின் ஆட்சியை பிடித்து ஏதாவது செய்து அதை அவர் பட்டியலிட முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு மற்ற கட்சியின் சாதனைகளை தன் சாதனைகளாக கூறி அப்பட்டமான பொய்யை கூற கூடாது என்றார் அன்புமணி.

English summary
PMK's youth wing president Anbumani Ramadoss condemns MK Stalin for claming PMK's acheivements as their party's.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X