For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டோல்கேட் ஊழியர் தாக்கப்பட்ட வழக்கு: அன்புமணி ராமதாசுக்கு சம்மன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில், சுங்கச்சாவடி ஊழியர் தாக்கப்பட்ட வழக்கில், மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் காரில் சென்றார். அப்போது, அவருடன் வந்தவர்கள் சுங்கச்சாவடியை உடனடியாகத் திறக்கவில்லை எனக் கூறி ஊழியரை தாக்கினர். இதில் சுங்கச்சாவடியும் சூறையாடப்பட்டது.

Anbumani told to appear in court in tollgate case

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்பட 7 பேர் மீது உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ் வழக்கு வியாழக்கிழமை நீதிபதி பழனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் அன்புமணி ராமதாசின் பாதுகாவலர் சக்திவேல் மற்றும் வழக்கில் தொடர்புடைய ஜீவானந்தம், ராஜா, அய்யனாரப்பன், வெங்கடேசன் உள்பட 6 பேர் ஆஜராயினர்.

அன்புமணி ராமதாஸ் ஆஜராகவில்லை. இதையடுத்து இவ் வழக்கை பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் அன்புமணி ராமதாஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

English summary
The Ulundurpet Judicial Magistrate Court-I has directed Anbumani Ramadoss, MP and youth wing leader of the Pattali Makkal Katchi, to appear before the court in connection with the tollgate incident case on February 10.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X