Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீக்கு எவ்ளோணா ? அப்படி செஞ்சா ரொம்பப் பெரிய தப்புண்ணா.. விருதுநகரை நெகிழ வைத்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: 'என் மண் என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சாத்தூரில் பயணிக்கும் போது டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். அப்போது அவர் நடத்திய உரையாடல் டீக்கடைக்காரரை நெகிழ வைத்ததாக பாஜகவினர் தெரிவித்தனர்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்,என் மக்கள்' யாத்திரை சென்று வருகிறார். கடந்த ஜூலை 28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேசுவரத்தில் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அண்ணாமலை தீவிரமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

Annamalais act of delighting the tea shopkeepers on the Virudhunagar Yatrai

அண்ணாமலையின் யாதை ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையிலும் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட யாத்திரை 200 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முக்கிய ஊர்களிலும் அண்ணாமலையின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவில்லை. எனினும் இந்த வாரம் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் தொடங்கிய 'என் மண்,என் மக்கள்' யாத்திரை ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டம் வரை சென்று மீண்டும் சிவகங்கை மாவட்டம் வழியாக மதுரைக்கு வந்தது. பின்னர் மதுரையை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடந்தது.விருதுநகர் மாவட்டத்தை கடந்து தற்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வரை சென்றுள்ளது.

ஒவ்வொரு ஊரிலும் நீண்ட தூரம் நடக்கும் அண்ணாமலை, அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.மனுக்களை வாங்குகிறார். கட்சியினர் உற்சாகத்துடன் வந்து மாலை அணிவித்து வரவேற்கிறார்கள். அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரமும் செய்து வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டங்களையும் விளம்பரப்படுத்தி வருகிறார். அண்மையில் குரான் பரிசத்த போது அதனை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டவர், அதேபோல் கிறிஸ்தவர்கள் பைபிள் பரிசளித்த போதும் கண்ணில் ஒற்றிக்கொண்டார்..

இதனிடையே விருதுநகரில் அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சியினர் பகவத் கீதை பரிசளித்தனர். அதனை பக்தியுடன் வாங்கி கொண்டார். அண்ணாமலையின் நீண்ட நடை பயணத்தில் நாள்தோறும் ஏராளமானோர் பங்கேற்று வருகிறார்கள் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அண்ணமலை ஒரு டீ கடையில் அமர்ந்து டீ குடித்தார். அப்போது, அவர் டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் டீ குடித்ததற்கான பணத்தை செலுத்தினார். முன்னதாக அண்ணாமலை டீக்கு எவ்ளோணா ?... என்று கேட்டார். அதற்கு டீக்கடைக்காரர்.. நீங்க நம்ம கடைக்கு வந்ததே எனக்கு பெருமையான விஷயம். டீக்கு காசு குடுத்து சங்கடப்படுத்தாதீங்க தம்பி... என்றார்.

அதற்கு அண்ணாமலை, அப்படியில்லண்ணா. உங்க வீட்டுக்கு வந்து டீ சாப்டுட்டு காசு குடுத்தா அது தப்பு. இது நீங்க தொழில் செய்யுற இடம். இங்க, நா குடிச்ச டீக்கு காசு தரலேன்னா அது ரொம் பெரிய தப்புண்ணா என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+