2016 டிசம்பர் 5ம் தேதிதான் ஜெ. இறந்தார்.. அப்பல்லோ விளக்கம்
ஜெயலலிதா மரணமடைந்தது கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிதான் என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணமடைந்தது பற்றி தேவையான குழப்பங்கள் பரவுவது துரதிஷ்டவசமானது என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிதான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா சகோதரர் திவாகரன், 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று கூறியிருந்தார்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் கிளைகளை காப்பாற்றுவதற்காக ஒருநாள் காத்திருந்து ஜெயலலிதாவின் மரணத்தை அறிவித்தனர் என்றும் கூறியிருந்தார் திவாகரன். இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. யாருடைய அழுத்தம் காரணமாக இது நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை அளித்த விளக்கத்தில் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிதான் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் பற்றியும் உயிரிழந்த தேதி, நேரம் பற்றி தவறான தகவலை கூறி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின் போது மருத்துவமனையில் அனைத்த விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை பற்றி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்கனவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications