ஜெ. சாவுக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோவுக்கு ரகசிய தொடர்பா? விளாசும் பொன்னையன்
ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரகசிய தொடர்பு உள்ளதா என மாஜி அமைச்சர் பொன்னையன் விளாசியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு ரகசிய தொடர்பு உள்ளதா என மாஜி அமைச்சர் பொன்னையன் விளாசியுள்ளார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே கருப்பு பூனை படையை அகற்றிவிட்டு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணைக் கோரி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஓபிஎஸ் அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் பொன்னையன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சசிகலா தரப்பை வெளுத்து வாங்கினார்.

ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே கருப்பு பூனை படையை திரும்ப பெற்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே கருப்பு பூனை படையை அகற்றிவிட்டு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கும்போதே ஜெயலலிதா சுயநினைவில்லாமல் இருந்தார் என்று கூறிய பொன்னையன், அப்பல்லோ அறிக்கையில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்தார் என கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதாவுடன் காவிரி விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆலோசித்ததாக சுகாதாரத்துறை செயலாளரான ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பொய் சொல்கிறார் என்றும் பொன்னையன் குற்றம்சாட்டினார். மேலும் ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களுடன் அப்பல்லோவுக்கு ரகசிய தொடர்பு உள்ளதா என்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications