ஜெ. மரணம்: விசாரணைக் கமிஷனில் டாக்டர் சத்யபாமா ஆஜர்.. அப்பல்லோவிலிருந்து வரும் முதல் நபர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் முன்பு அப்பல்லோ மருத்துவமனை அதிகாரி சத்யபாமா இன்று ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், சசிகலா குடும்பத்தினர் என பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Apollo hospital doctor Sathyabama appeared in the Arumugasami commission

சசிகலா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிராதாப் ரெட்டி ஆகியோருக்கும் அந்த கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. மவுனவிரதம் இருப்பதால் விசாரணை கமிஷனில் ஆஜராக முடியாது என சசிகலா தனது வக்கீல் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்யபாமா சென்னை எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜராகியுள்ளார். இவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆஜராகும் முதல் நபர் ஆவார்.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவராகவும் உள்ள சத்தியபாமாவிடம் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது எப்படி இருந்தார், அவருக்கு என்ன மாரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து ஆவணங்களுடன் விளக்கமளித்து வருகிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Apollo hospital doctor Sathyabama appeared in the Arumugasami commission. She is the first person who appeared in the inquire commission from Apollo hospital.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற