சங்ங்ங்கட்டமா போயிருச்சு.. ஓடும் ரயிலில் பல்லு, வயிறு! ராணிப்பேட்டை அரக்கோணம் ஸ்டேஷனில் யாருங்க இவரு
ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனையே ஒரு பயணி, வெலவெலக்க செய்துவிட்டார்.. வடமாநில இளைஞர் ஏன் இப்படி செய்தார்? அவருக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.. ஆனால், பயணிகள் முதல் அதிகாரிகள் வரை இந்த இளைஞரால் கடுப்பாகிவிட்டார்கள்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நீராஜ்குமார். இவர் பெங்களூரு செல்வதற்காக, பீகாரில் இருந்து சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று ஏறியிருக்கிறார்.. ரயில் பெரம்பூர் வந்தபோது அவருக்கு திடீரென பல்வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் சரியாக சாப்பிட முடியவில்லை.

பல்வலி என்றால் தனக்கு சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்று நினைத்த அந்த இளைஞர், திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக அங்கிருந்த பயணிகளிடம் சொன்னார்.. வயிறு வலி என்றால், உடனே தன்னை எல்லாரும் கவனிப்பார்கள், சிகிச்சையும் கிடைக்கும் என்றும் கணக்கு போட்டார்.
வயிறுவலி: எனவே, வயிற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டு, ரயிலிலேயே உருண்டு புரண்டார்.. வலி தாங்க முடியலியே என்று புலம்பி கொண்டே துடித்தார்.. இதைப்பார்த்து பதறிப்போன சக பயணிகளும், ரயில் ஓடிக் கொண்டிருந்ததால், என்ன செய்வதென்றே தெரியவில்லை.. இளைஞர் நீரஜ்குமார் மீது பாவமும், பரிதாபமும் ஏற்பட்ட நிலையில், ஒருசிலர் முன்வந்து, அவருக்கு முதலுதவி தந்தார்கள்.. மேலும் சிலர், அரக்கோணம் ரயில்வே நிலைய மேலாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அரக்கோணம் ஸ்டேஷன் மேனேஜர், அங்கிருந்த ரெயில்வே மருத்துவமனை டாக்டர்கள், உதவியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படை என குழுக்கள் என அனைவரையும் வரவழைத்தார்..
சிறிது நேரத்தில் ரயில் ஸ்டேஷனுக்கு வந்துவிடும் என்பதால், அனைவரையும் மருத்துவ உபகரணங்களுடன் தயாராக நிற்கும்படியும், ரெயிலில் வரும் நீரஜ்குமார் என்ற பயணிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்... அத்துடன், நடைமேடை 1-லேயே அனுமதித்து அந்த ரெயிலை நிறுத்தினார்.
உடனடி சிகிச்சை: ரயில் நின்றதுமே, ரெயில்வே பாதுகாப்பு படையினர், கம்பார்ட்மென்ட்டிற்குள் சென்று, நீராஜ்குமாரை வெளியே அழைத்து வந்தனர்... அவருக்கு சிகிச்சை அளிக்கவும் முயன்றனர்.. ஆனால், நீரஜ் குமார் திடீரென வயிற்றை காண்பிக்காமல், தன்னுடைய வாயை திறந்து பல்வலி என்றார்.. இதனை பார்த்து ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வயிற்று வலி என்று ஏற்கனவே தகவல் தந்ததால்தான், அதற்கான மாத்திரை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். இப்போது திடீரென பல் வலி என்றதுமே, ரெயில்வே டாக்டர்களுக்கு கோபம் வந்தது.. எனினும், பல் வலிக்கான மாத்திரையை நீரஜ்குமாருக்கு தந்தார்கள்..
மேலும் அவரிடம், இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஏசி பெட்டி: சில மாதங்களுக்கு முன்புகூட, அரக்கோணம் ரயிலில் இப்படியொரு சம்பவம் நடந்தது.. சென்ட்ரலிலிருந்து, திருவனந்தபுரத்திற்கு செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில், AC பெட்டியின் பாத்ரூம் பக்கத்திலேயே இளைஞர் ஒருவர் படுத்திருந்தார்... பயணிகள் பாத்ரூமுக்கு அவரை தாண்டி செல்ல முடியாத அளவுக்கு, குறுக்கும் நெடுக்குமாக படுத்து, போதையிலேயே உருண்டு கொண்டிருந்தார்... அனைவரையும் பார்த்து கொண்டே இருந்தார்.
பயணிகள் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் சொன்னார்கள். டிடிஆரும் உடனே வந்து, இளைஞரை எழுப்ப முயன்றார்.. ஆனால், அரக்கோணம் ஸ்டேஷன்வரை அந்த இளைஞர் எழவில்லை.
யார் அந்த நபர்: பிறகு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தரப்பட்டு, அவர்கள் கம்பார்ட்மென்ட்டுக்குள் சென்று, பாத்ரூம் அருகே படுத்திருந்த இளைஞரை, குண்டுகட்டாக இழுத்துசென்று பிளாட்பாரத்தில் போட்டனர்.. டிக்கெட் பரிசோதகர் முதல் பயணிகள் வரை ஒட்டுமொத்த பேருக்கும் சென்னை டூ அரக்கோணம் வரை டென்ஷன் தந்த அந்த "குடிமகன்" யாரென்றே கடைசிவரை தெரியவில்லை...!!












Click it and Unblock the Notifications