ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி.. பகுஜன் சமாஜ் மேலிட பிரதிநிதிகளை ஆதரவாளர்களுடன் அலறவிட்ட சம்பவம்!
சென்னை: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அக்கட்சியின் மாநில தலைவர் ஆனந்தனுக்கு எதிராக தமது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோருடன் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக, அதன் அடையாளமாக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல்வேறு கொலை- கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஏராளமான ரவுடிகள் அடுத்தடுத்து சிக்கினர். தற்போது வரை இந்த வழக்கின் விசாரணை ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகரை அச்சுறுத்தி வந்த கொலைகார கூலிக் கும்பல்கள் ஒருங்கிணைந்து ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அரங்கேற்றி இருந்தன.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆனந்தன் நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ராம்ஜி கவுதம், முன்னாள் எம்பி ராஜாராம் ஆகியோர் தமிழ்நாடு வருகை தந்தனர்.
இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியின் மேலிடப் பிரதிநிதிகளை அக்கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் ஒன்று திரண்டு நேரில் சந்தித்தனர். அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன், காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆவேசமாக புகார் தெரிவித்தார். மேலும், ஆம்ஸ்ட்ராங் நியமித்த பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்திருக்காங்க.. கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கு கட்சியின் கொள்கை என்ன என்று தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு கட்சியை வளர்த்துவிட்டு ஈஸியாக பொறுப்புகளை விட்டுக் கொடுத்துவிடுவோமா? அப்படி எல்லாம் கொடுக்கமாட்டோம்.. மாநில தலைவர் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்று வாதிட்டார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.
அத்துடன் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கை தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள், மேலிடப் பிரதிநிதிகளிடம் மனு அளித்து முழக்கமிட்டனர். இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
-
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications