மும்பை தாக்குதலின் போது 100 மணிநேரம் தொடர்ந்து செய்தி வழங்கிய அர்னாப் கோஸ்வாமி #arnabgoswami
டைம்ஸ் நவ் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து அர்னாப் கோஸ்வாமி ராஜினாமா செய்துள்ளார்.
சென்னை: டைம்ஸ் நவ் டிவியின் தலைமை செய்தி ஆசிரியர் பொறுப்பில் இருந்து அதிரடியாக ராஜினாமா செய்த அர்னாப் கோஸ்வாமி மும்பை தாக்குதலின் போது தொடர்ந்து 100 மணிநேரம் செய்திகளை லைவ்வாக தொகுத்து அளித்தவர்.
2007-ம் ஆண்டு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியை ரேட்டிங்கில் முதல் இடத்துக்கு கொண்டு வந்தார் அர்னாப் கோஸ்வாமி. பின் தொடர்ந்து 8 ஆண்டுகாலம் டைம்ஸ் நவ் ரேட்டிங்கில் முதலிடத்திலேயே இருந்ததற்கு அர்னாப் கோஸ்வாமிதான் காரணம்.

அர்னாப் கோஸ்வாமியின் இரவு 9 மணி விவாத நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. விவாதத்தில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள், வல்லுநர்களை கிடுக்குப்பிடி கேள்விகளால் துளைத்தெடுத்து பல இளைஞர்களை 'அர்னாக் கோஸ்வாமி'யாக 'கத்த' வேண்டும் என கனவில் மிதக்க விட்டவர்.
2008 மும்பை தாக்குதலின் போது தொடர்ந்து 100 மணிநேரம் செய்திகளை லைவ்வாக தொகுத்து அளித்தவர். அத்துடன் காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், அன்னா ஹசாரே போராட்டம் உள்ளிட்டவற்றை விரிவாக பதிவு செய்தவர் அர்னாப் கோஸ்வாமி.
அண்மையில் அர்னாப் கோஸ்வாமி, பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி விமர்சித்ததால் அவருக்கு மிரட்டல் வந்தது. இதனால் மத்திய அரசு அர்னாப்புக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்தது.
அத்துடன் ஏராளமான சர்ச்சைகளிலும் சிக்கியவர் அர்னாப் கோஸ்வாமி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications