For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Oneindia App Download

நீதிபதிகள் நியமன விவகாரம்.. நீதிபதி கட்ஜூக்கு அட்டர்னி ஜெனரல் ரோத்தகி கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி தேவையற்ற சர்ச்சையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ கிளப்பிவிட்டிருக்கிறார் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜூ தமது இணையப் பக்கத்தில் பதிவு செய்தது இது:

• நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது;
• சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த அசோக்குமாரை கூடுதல் நீதிபதியாக்குவதற்காக பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை திமுக அமைச்சர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து மிரட்டினார்; (Justice Katju Blog)
• முதல்வர் ஜெயலலிதா நீதித்துறையில் தலையிட்டதே இல்லை
Attorney general Mukul Rohatgi questions motive & timing of Markandey Katju's exposé

கட்ஜூ கருத்துக்கு எதிர்வினைகள்:

• நீதிபதி கட்ஜூ கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
• நீதிபதி கட்ஜூவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
• நீதிபதிகள் நியமனத்தில் நிர்ப்பந்தம் இருப்பதை அறிந்த கட்ஜூ, அதனை அப்போதே அம்பலப்படுத்தாது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கேள்வி எழுப்பினார்.
• மார்க்கண்டேய கட்ஜூ கூறுவது அனைத்தும் உண்மை என்றாலும், இதுபற்றி உரிய நேரத்தில், குரல் கொடுக்காமல் தற்போது கூறுவது சரியல்ல என்று மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி விமர்சித்தார்.
• கட்ஜூ குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

Post by Kalaignar Karunanidhi.

• இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி, தி.மு.க. எம்.பி.க்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான். தி.மு.க நெருக்கடி தரவில்லை என்றார்.
• இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, கட்ஜூ வகித்து வரும் பிரஸ் கவுன்சில் தலைவர் பதவி அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அவரது விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்கிறார்.

English summary
Attorney general Mukul Rohatgi questioned the timing and motive of retired Supreme Court judge Markandey Katju in raking up a "needless controversy" related to political pressure being brought to bear on the selection process for judges through the collegium route. Rohatgi said the "obvious reason" was that "his tenure is coming to an end", referring to Katju's term as Press Council of India chairman due to finish on October 5.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X