மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி
திருப்புவனம்: தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில், பட்டாடை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இக்கோவில் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் வேண்டினால், "நினைத்த காரியம் கைகூடும்' என்ற நம்பிக்கையில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

காந்தி அழகிரி வழிபாடு
தி.மு.க., வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, இக்கோவிலுக்கு நேற்று தன் சகோதரியுடன், உச்சிக் கால பூஜையில் பங்கேற்றார்.

பட்டாடை சாத்திய காந்தி அழகிரி
குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கவும், உறவுகளுடன் ஒற்றுமை ஏற்படவும் அம்மனுக்கு நீலநிற பட்டாடை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

விளக்கு வழிபாடு
நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு பூஜை செய்து வழிபட்ட இவர்கள், கோவிலில், 20 நிமிடம் இருந்து விட்டு, காரில் புறப்பட்டனர்.

பகைவர்களை அழிக்கும் அம்மன்
செய்வினை பில்லி சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் தென்மாவட்ட பக்தர்களிடையே பத்ரகாளியம்மன் மிகவும் புகழ் பெற்றுள்ளார்.

ஆக்ரோச பத்திரகாளியம்மன்
பத்திரகாளியம்மன் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர். இவரை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு.

எலுமிச்சை மாலை
அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications