நாந்தான் 'அம்மா'வுக்கு நெருக்கமாச்சே.. எதுக்கு இத்தனை கேஸ்.. அரசக்குமார் ஆச்சரியம்!

தன் மீது போடப்பட்டுள்ள அத்தனை வழக்குகளையும் சட்ட ரீதியாக உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசக்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்வி நிறுவன அனுமதி வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல வழக்குகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் செல்லத்துரை என்பவர் 2006ம் ஆண்டு பி.டி.அரசகுமார் என்னிடம், தான் தொடங்க உள்ள கல்வி நிறுவனத்தில் அதிகமான வருமானம் கிடைக்க உள்ளது. அதனால் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி பணம் ரூ.5 லட்சம் வாங்கினார். அதன் பிறகு அந்த பணமும் தரவில்லை. கணக்குகளும் காட்டவில்லை.
இது பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த அரசகுமாரிடம் கேட்க சென்ற என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்று கொடுத்த புகாரின் பேரில் சிறையில் இருக்கும் அரசக்குமாரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பி.டி.அரசகுமார் அங்கிருந்த செய்தியாளர்களிடம், நான் 1989 முதல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவன். அப்படி இருக்கும் போது ஏன் என் மீது இத்தனை வழக்குகள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போது போடப்பட்ட வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நீதிபதியிடம் சொல்லிவிட்டேன். விரைவில் சட்டப்படி எல்லா வழக்குகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்று கூறினார்.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications