For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு!

By Mathi
Google Oneindia Tamil News

babri masjid demolition
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இன்று உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்பை தெரிவித்தனர். பாபர் மசூதி இடித்து 21 ஆண்டுகள் நிறைவடைந்தையோட்டி இன்று நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுவிடாமல் இருக்க, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையம், கோவில்கள் உளபட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. வெளி மாநிலங்களுக்கு செல்லும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்

நாடு முழுவதும் புனித தலங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகமான கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அயோத்தியில்...

முஸ்லிம்கள் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக கடைபிடிக்கிறார்கள். இந்துக்கள் பாபர் மசூதி இடிப்பு தினத்தை வெற்றி நாளாக கடைபிடிக்கிறார்கள் அதனால் அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

English summary
Elaborate security arrangements have been made in Uttar Pradesh and other parts of the country in view of the 21st anniversary of Babri Masjid demolition on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X