ஜவுளிக்கடை பையில் வைத்து ரோட்டில் வீசப்பட்ட ஆண் குழந்தை: ராஜபாளையத்தில் பரபரப்பு
ராஜபாளையம்:பிறந்து சிலநாள்களே ஆன ஆண் குழந்தை பையில் வைக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜபாளையம் செவல்பட்டி தெற்குத்தெரு பகுதியில், ஒரு துணிக்கடை பை மர்மமான முறையில் ரோட்டின் அருகே கிடந்தது. அதற்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சிலர் வந்து பார்த்தபோது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை பைக்குள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார், குழந்தையை மீட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது. குழந்தையை பையில் வைத்து சாலையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரை கண்டுபிடிக்கும் வரை, இக்குழந்தை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
