சசிகலா புஷ்பா மீதான நிர்வாண மசாஜ் புகாரை வாபஸ் பெற்ற சகோதரிகளில் ஒருவர் மாயம்: கடத்தலா?
நெல்லை: எம்.பி. சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்து பின்னர் அதை திரும்பப் பெற்ற சகோதரிகளில் பானுமதியை காணவில்லை.
எம்.பி. சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்தபோது அவரும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும், மகன் பிரதீப் ராஜாவும் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த கருப்பசாமியின் மகள்களான பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தனர்.

சசிகலா புஷ்பாவின் தாய் கௌரியும் தனது மகளுக்கு ஆதரவாக இருந்ததாக சகோதரிகள் தெரிவித்தனர். இது குறித்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் தாங்கள் கொடுத்த புகாரை நேற்று முன்தினம் திடீர் என வாபஸ் பெற்றனர்.
புகாரை வாபஸ் பெற்ற பிறகு பானுமதியை நேற்று மாலை 4.30 மணி முதல் காணவில்லை. இதையடுத்து அவரது சகோதரி ஜான்சிராணி நேற்று திசையன்விளை காவல் நிலையத்திற்கு சென்று பானுமதியை யாரோ கடத்திவிட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
பானுமதி திடீர் என்று காணாமல் போயுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications