திருமாவளவனை கொட்டிய தேனீ பாமக வளர்த்ததா?
சென்னை: திருமாவளவனை தேனீ கடிக்க காரணம் பாமகதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தேனி கடித்த வலியை விட அதிகம் வலிக்கிறதாம் திருமாவளவனுக்கு. போஸ்டர் அடித்து ஓட்டியது யார் என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் திருமாவளவன்.
லோக்சபா தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இதற்காக செவ்வாய்கிழமையன்று திருமானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 8 மணிக்கு பிரசாரத்தை வாரணவாசியில் தொடங்கிய அவர் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட கோயில் எசனை-வெங்கனூர் கிராமங்களுக்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தோப்பில் தோழமை கட்சியினருடன் அமர்ந்தார்.
அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அனைவரையும் துரத்த ஆரம்பித்தது. நெற்றியில் கொட்டிய தேனீ இதில் வேட்பாளர் திருமாவளவன் தனது வாகனத்தில் ஓடி வந்து ஏற முயன்றபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் துரத்தி வந்த தேனீ வேட்பாளரின் நெற்றியில் கொட்டியது. 22 பேருக்கு தேனீ கடி மேலும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரையும் துரத்த ஆரம்பித்த தேனீக்கள் திருமாவளவன் தம்பி செங்குட்டுவன், வெங்கனூரை சேர்ந்த கலியபெருமாள், திண்டிவனம் துரைராஜன் உள்ளிட்ட 22 பேரை கொட்டின.
இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் வெங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு மாத்திரை மருந்துகள் வழங்கபட்டன. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 5.30 மணியிலிருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார் திருமாவளவன்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications