பாஜக அணியில் தேமுதிக-14, பாமக-8, பாஜக-8, மதிமுக 7 தொகுதிகளில் போட்டி- ராஜ்நாத்சிங் அறிவிப்பு!!
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிக 14, பா.ம.க. 8, பா.ஜ.க. 8, ம.தி.மு.க.7 தொகுதிகளில் போட்டியிடும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
லோக்சபா தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் மதிமுக, தேமுதிக, பாமக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இந்த கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு இழுபறி தமிழக தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே இல்லாதவகையில் உச்சபட்சமான குழப்பமாக இருந்தது.

இதனால் பாரதிய ஜனதா கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று..நாளை என பல மாதங்களாக இழுபறியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் ஒருவழியாக பல அதிருப்திகளுக்கு மத்தியில் பாஜக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதற்காக பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் இல. கணேசன் ஆகியோர் ராஜ்நாத்சிங்கை வரவேற்றனர். அதேபோல் பாஜக கூட்டணிக் கட்சியான மதிமுகவின் பொதுச்செயலர் வைகோவும் தொண்டர்களுடன் சென்று ராஜ்நாத்சிங்கை வரவேற்றார்.

ராஜ்நாத்சிங்குடன் தேமுதிக, மதிமுக, பாமக தலைவர்கள் ஆலோசனை
பின்னர் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் ராஜ்நாத் சிங்கை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், மதிமுகவின் பொதுச்செயலர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தலைவர் ஜி.கே. மணி, இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி. சண்முகம், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் ஈஸ்வரன் உள்ளிட்டோர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை முடிவடைந்த பின்னர் அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக அறிவித்தார்.

தொகுதி பங்கீடு- தேமுதிகவுக்கு 14
அத்துடன் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டு விவரத்தையும் ராஜ்நாத்சிங் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
பாஜக அணியில்
தேமுதிக- 14
பாமக -8
பாஜக- 8
மதிமுக- 7
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- 1
இந்திய ஜனநாயக கட்சி- 1 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவித்தார் ராஜ்நாத்சிங்.
இந்த அறிவிப்பின்போது இந்தக் கூட்டணி உருவாக காரணமாக இருந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனும் அங்கிருந்தார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications