எச்.ராஜாதான் தேசவிரோதி.. சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் தாக்கு

Posted By: KMK ESAKKIRAJAN
Subscribe to Oneindia Tamil
  எச்.ராஜா தேசவிரோதி- கே.பாலகிருஷ்ணன் பேச்சு

  திருப்பூர் : எச்.ராஜா தேசவிரோதி என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு

  திருப்பூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபின் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், எச்.ராஜாதான் தேசவிரோதி , தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக பேசி வருகிறார்.

  bjp national secretary h raja is the anti national k balakirshnan

  இவ்வாறு பேசியும் தமிழகத்தில் சகஜமாக நடமாட விட்டிருக்கும் அளவு தமிழர்கள் சகிப்புத்தன்மையோடு இருக்கிறார்கள். காவிரிபிரச்சினைக்காக போராடுவதால் நாங்கள் தேசவிரோதிகள் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகிறோம். அதிமுகதான் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது.

  அதிமுக அரசால் காவிரி மேலான்மை வாரியம் விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கூட பெறமுடியவில்லை. காவிரி விவகாரத்தில் முதல்வர் எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசின் பிரதிநிதியான ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம்.

  பிரதமருக்கு கருப்பு கொடி காட்டியதை தவிர்த்திருக்கலாம் என ஆளுநரும் தெரிவித்தார். ஆனால் கருப்புக்கொடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம் என தெரிவித்தோம்.

  காவிரி விவகாரத்தில் உயர் அதிகாரம் படைத்த காவிரி மேலான்மை வாரியம் அமையும் வரை போராடுவோம். அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து 16 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு கே பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  CPM K Balakirshnan has said that BJP national secretary H Raja is the Anti national.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற