அதிமுக உள் கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பான பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிரடியாக அவர் முதல்வர் பதவிக்கு வரும் வகையில் கபளீகரம் செய்து வருகிறார்.

அவரது பதவியேற்பு விழாவிற்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில் நிலையில், ராஜினாமா செய்த முதல்வர் பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். எனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு அதிமுக தான் காரணம். இதில் நாங்கள் செய்வதற்கும், சொல்வதற்கும் எதுவும் இல்லை. ஆளுநருடன் தொடர்பு கொண்டு நீங்கள் இவருக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வையுங்கள் என்றோ, இவரை முதல்வராக நியமிக்க கூடாது என்று கூறுவதோ எனது வேலை கிடையாது. இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதில் மத்திய அரசு தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications