For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைர விழா மூலம் விளம்பரம் தேட பார்க்கின்றனர் பொன்.ராதா, தமிழிசை.. ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு!

கருணாநிதியின் வைர விழா மூலம் பாஜகவினர் விளம்பரம் தேட பார்ப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதியின் வைர விழா மூலம் பாஜகவினர் விளம்பரம் தேட பார்ப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழிசையும் விளம்பரம் தேட தான் உதவியாக இருக்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சட்டசபை உறுப்பினராகி அறுபது ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனை அவரின் பிறந்த நாளோடு சேர்த்து வைரவிழாவாக கொண்டாட திமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த வைர விழாவில் 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழ்களை கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பாஜகவை அழைக்கபோவதில்லை

பாஜகவை அழைக்கபோவதில்லை

இந்நிலையில் கருணாநிதியின் வைர விழாவுக்கு பாஜகவை அழைக்கப்போவதில்லை என ஸ்டாலின் கூறியிருந்தார். திராவிட கழகத்தை அழிக்க நினைப்பவர்களை அழைக்க போவதில்லை என்றார்.

கருணாநிதிக்காக அல்ல

கருணாநிதிக்காக அல்ல

இதற்கு பதிலளித்த தமிழிசை கருணாநிதியின் வைர விழாவை கூட்டணி கட்சிகளுடன்மட்டும் கொண்டாட வேண்டாம் அனைவரையும் அழைத்து சிறப்பாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைர விழா கருணாநிதிக்காக நடத்தப்படவில்லை.

விளம்பரம் தேட பார்க்கிறார்கள்

விளம்பரம் தேட பார்க்கிறார்கள்

அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார். இந்நிலையில் இன்று இதுகுறித்து பேசிய ஸ்டாலின் கருணாநிதியின் வைர விழாவைவைத்து பாஜக விளம்பரம் தேட பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம் தேட உதவ மாட்டேன்

விளம்பரம் தேட உதவ மாட்டேன்

கருணாநிதியின் வைர விழாவை வைத்து பாஜக விளம்பரம் தேட உடந்தையாக இருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் விளம்பரம் தேட உதவ மாட்டேன் என கூறியுள்ளார்.

English summary
BJP seeks advertisement by the platinum jubilee of DMK leader Karunanidhi, stalin said. I will not help them to advertisement with this Stalin said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X