பக்கோடா விற்ற நாராயணசாமிக்கு எதிராக அல்வா கடை திறந்த பாஜக!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அல்வா கடை திறந்த பாஜக!- வீடியோ

  புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியை கண்டித்து அம்மாநில பாஜகவினர் அல்வா விற்பனை செய்து நூதன போராட்டம் நடத்தினர்.

  பிரதமர் மோடி பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது பக்கோடா விற்பவர் கூட நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் வருவாய் ஈட்டுவதாக தெரிவித்தார்.

  பாஜக தலைவர் அமித்ஷாவும் பக்கோடா விற்பனை செய்வது தவறில்லை என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

  பக்கோடா விற்ற நாராயணசாமி

  பக்கோடா விற்ற நாராயணசாமி

  இந்நிலையில் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த 7ஆம் தேதி பக்கோடா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் ஏதும் இல்லை என குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி பக்கோடா, பஜ்ஜி விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

  காந்தி, நேரு வீதி சந்திப்பில்

  காந்தி, நேரு வீதி சந்திப்பில்

  இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றனர். புதுச்சேரி காந்தி வீதி நேரு வீதி சந்திப்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

  அல்வா கடை திறப்பு

  அல்வா கடை திறப்பு

  இந்நிலையில் முதல்வர் நாராயணசாமியை கண்டித்து புதுச்சேரி பாஜகவினர் இன்று அல்வா விற்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி நேரு வீதியில் முதல்வர் நாராயணசாமி பெயரில் அல்வா கடை திறந்து பாஜக நூதன போராட்டம் நடத்தினர்.

  அல்வா கொடுத்த முதல்வர்

  அல்வா கொடுத்த முதல்வர்

  மக்களுக்கு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் முதல்வர் நாராயணசாமி அல்வா கொடுத்ததாக கூறி பாஜகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP workers were selling Halwa against Puducherry Chief minister Narayanasami. Puducherry Chief minister was making Pakkoda against Prime minister Modi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற