வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாட புத்தகங்கள் - வீட்டுக்கே அனுப்பி வைக்கும் தமிழக அரசு
சென்னை: மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு, "கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் யாரேனும் பாடநூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தின் www.textbookcorp.in வழியாகப் பதிவு செய்து பிரதி எடுத்து, அவர்களின் வீட்டு முகவரிக்கே பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும். அதனை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையைப் பயன்படுத்தி உடனுக்குடன் பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
தமிழ்நாட்டு தலைக்கு மேல் கத்தி.. ஏடாகூடமான எல் நினோ! கொஞ்சம் பிசகினாலும் போச்சு! பறந்த வார்னிங்! -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications