புழல் சிறையில் பயங்கரம்.. ரவுடி பாக்சர் முரளி எதிர் கோஷ்டியினரால் குத்தி கொலை
Recommended Video

சென்னை: சென்னை புழல் சிறையில், ரவுடிகள் நடுவே ஏற்பட்ட மோதலில், பாக்சர் முரளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாக்சர் முரளி. 3 கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட 16 வழக்குகளில் இவரது பெயர் அடிபட்டது. எனவே சில மாதங்கள் முன்பாக குண்டர் சட்டத்தின்கீழ் பாக்சர் முரளியை போலீசார் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், இன்று காலை சிறை கழிவறையில் வைத்து, பாக்சர் முரளியின் எதிர் கோஷ்டியை சேர்ந்த ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளான சக சிறை கைதிகள், கார்த்தி, ரமேஷ், ஜோசப், பிரதீப் குமார், சரண்ராஜ் ஆகிய ஐந்து பேரும், பாக்சர் முரளியை திடீரென சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், கட்டை, கல் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து, பாக்சர் முரளியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து, பிறப்புறுப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டுபட்டு துடித்துள்ளார் பாக்சர் முரளி.
உடனடியாக சிறையிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு போலீசார் முதலுதவி அளித்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பாக்சர் ரவி இறந்துவிட்டார்.
சிறைக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அனுமதித்தது எவ்வாறு, எதிர் கோஷ்டி என தெரிந்தும் இருவரும் ஒரே இடத்தில் சேரவிட்டது எப்படி என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. 6 கைதிகளுக்கு 1 போலீஸ்காரர் என்ற விகிதத்தில் சிறைக்குள் காவலர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டு புழல் சிறையில் சுமார் 100 கைதிகளுக்கு 1 போலீஸ் பாதுகாப்புதான் அளிக்க கூடிய நிலையில் காவல்துறை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதும் இதுபோன்ற கொலைகளுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால்தான், புழல் சிறையில், கைதிகள் நடுவே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு அடிதடி நடக்கிறது. சில நேரங்களில் கொலையாக மாறிவிடுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications