பூட்டிய வீட்டுக்குள் மூட்டை, மூட்டையாய் பணம் – பயத்தில் உறைந்து போன உரிமையாளர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஒருவரது வீட்டில் பிளாஸ்டிக் பைகளில் குப்பை குவியல்களாக பணக்கட்டுகள் இருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சரவண பெருமாள்.
இவருக்கு சொந்தமான வீட்டில் சவுந்திர பாண்டியன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.அவர் அருகாமையில் உள்ள கோவில்களில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 மாதமாக வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று சரவண பெருமாள் தன்னுடைய வீட்டை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விடலாம் என்று வீட்டை திறந்து பார்த்தார். அப்போது பிளாஸ்டிக் பைகளில் குப்பை குவியலுடன் ரூபாய் 5, ரூபாய் 10, ரூபாய் 20, ரூபாய் 50 என்று ரூபாய் நோட்டுக்கள் மூட்டைகளாக இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டார்.
பிளாஸ்டிக் பைகளில் ரூபாய் 5 ஆயிரம் வரை இருந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications