தனியார் பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி சிறுமி பலி.. ஈரோட்டில் சோகம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: வாகன ஓட்டியின் கவனக்குறைவால் தனியார் பள்ளி வாகனம் 4 வயது சிறுமி மீது மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பீமாராஜ். இவருக்கு ஷீலா என்ற மனைவியும் தானுஷ் ஸ்ரீ என்ற 4 வயது மகளும் உள்ளனர்.

Bus accident, 4 year old girl died

இவர்களது வீட்டின் அருகில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின் சிறுமி தானுஷ் ஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். இது தெரியாத டிரைவர் பழனிவேல், பேருந்தை பின் பக்கமாக இயக்கியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி மேல் பேருந்து மோதியுள்ளது.

இதில் நிலை தடுமாறி சிறுமி கிழே விழுந்துள்ளார். அப்போது சக்கரம் தலை தானுஷ் ஸ்ரீயின் தலை மேல் ஏறியுள்ளது. இதில் தலை நசுங்கி சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிறுமியின் உடல் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தனியார் பள்ளி டிரைவரின் கவனக் குறைவாலேயே இந்த விபத்து நடந்துள்ளது என்று சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A four year old girl died in a private school accident in Erode. Police enquiry.
Please Wait while comments are loading...