ஆட்டோக்களில் அதி பயங்கர வசூல் வேட்டை.. ரயில்களைத் தேடி ஓடும் மக்கள் #busstrike

Posted By:
Subscribe to Oneindia Tamil
  போராட்டத்தில் ஈடுபடுவர்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை - அமைச்சர் விஜய பாஸ்கர்- வீடியோ

  சென்னை: தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆட்டோக்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

  அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவீதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Bus Strike: Auto fares are getting higher than usual in TN

  இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. அண்ணா தொழிற்சங்கத்தினரை கொண்டு ஒரு சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே காலை வேளைகளில் பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் ஆட்டோக்களில் பயணம் செய்தால் அதில் வழக்கத்துக்கு மாறாக 3-லிருந்து 5 மடங்கு வரை அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதேபோல் தனியார் பேருந்துகளும் கொள்ளை அடிப்பதாக புகார் கூறுகின்றனர்.

  இதுகுறித்து பயணிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கமாக ரூ. 20 கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் ரூ.100 கேட்கின்றனர். மதுரையில் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்ல ரூ.150 லிருந்து ரூ.200 ஆக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

  மேலும் மின்சார ரயில்களிலும் கூட்டம் அலை மோதுவதால் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களால் அதில் பயணம் செய்ய முடியவில்லை என்கின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  As the transport staffs in TN are involving in strike, people prefer for auto, but the drivers are getting more fare than the usual.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற