நீட் தேர்வு வழக்குகள் அனைத்தும் மாற்றம்... சென்னை ஹைகோர்ட்டில் இனி விசாரணை
நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை : நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக மதுரை நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ் மொழியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் நீட் தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திருச்சியை சேர்ந்த மாணவி மலர்க்கொடி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த
சேர்ந்த மாணவி ஜெரோபா ஆங்கில மொழி வினாத்தாள் தவிர குஜராத்தி, இந்தி, மராத்தியில் மொழியில் வினாத்தாள் எளிமையாக இருந்தததாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது குறித்து விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ மற்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முன் தினம் சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், நீட் தேர்வு முடிவை வெளியிட விதித்த தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழில் கேட்கப்பட்ட கேள்வித் தாள் மட்டுமே கடினமாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறியது.
நீட் தேர்வை தமிழக அரசு எப்போதும் எதிர்ப்பதாக அரசு தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஜூன் 12ம் தேதி அனைத்து வழக்குகளும் விசாரணைக்கு வர இருந்த நிலையில், நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளர் தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications