இரு பிரிவினரிடையே மோதல்... 2 பேருக்கு அரிவாள் வெட்டு... நெல்லையில் பரபரப்பு !
நெல்லை: நெல்லை அருகே இரு பிரிவினர்களுக்கிடையே மோதல் வெடித்ததில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கலவரம் எதுவும் நடக்காமல் இருக்க அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ளது நெசவாளர் காலனி. கடந்த சில வாரங்களுக்கு முன், மீனவர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், நெசவாளர் காலனி வழியாக பைக்கில் வேகமாக சென்றனர். அப்போது, அங்கிருந்த ஒருவர் ஏன் இவ்வளவு வேகமாக செல்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகராறு குறித்த புகார் ஒன்று கல்லிடைக்குறிச்சி போலீசாரிடம் கொடுக்கப்பட்டது. விசாரணையை முடித்த பின்னர் போலீசார் அறிக்கை ஒன்றை தயாரித்து சேரன்மாதேவி சப் கலெக்டரிடம் சமர்பித்துள்ளனர்.
இந்நிலையில், மீனவர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் இரண்டு பைக்குளில் அதே நெசவாளர் காலனி வழியாக படுவேகமாக மீண்டும் சென்றுள்ளனர். அப்போது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த பூல்குமார் என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 7 பேரும் பைக்கை ஓரமாக நிறுத்தி இறங்கி வந்தனர். பின்னர் இறங்கிய வேகத்தில் பூல்குமாரை அரிவாளால் வெட்டினர். 7 பேரின் வெட்டை சமாளிக்கும் வகையில் பூல்குமாரும் அங்கிருந்த மற்றொருவரும் எதிர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, மீனவர்கள் காலனியை சேர்ந்த இளைஞர் மாரிகுமாருக்கு அரிவாள் வெட்டி விழுந்தது. மோதலில் காயம் அடைந்த மாரிகுமாரும் பூல்குமாரும் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோதல் சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சபிபுல்லா விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், பூல்குமார் கொடுத்த புகாரின் பேரில் மீனவர் காலனியை சேர்ந்த மகாராஜன், இசக்கிமுத்து, சிவா, சுரேஷ், அந்தோணி, மயில்ராமன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இருதரப்பினரிடையே நடந்துள்ள இந்த மோதலால் நெல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications