பாஜகவோடு கூட்டணி வைக்க சொன்னதுக்கு 'ஏனுங்க' மாடு திருடு போகணும்? அதிமுக எம்எல்ஏ கனகராஜ் புலம்பல்!
அ.தி.மு.க. வரும் காலங்களில் பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ்.இப்போது அவரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடுகள் த
கோவை: சூலூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜின் வீட்டில் கட்டப்பட்டிருந்த மாடுகள் திருடுபோயுள்ளதால் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ள அவர், இதன் பின்ணணியில் ஏதாவது சதி இருக்குமோ என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனகராஜ். அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அணி மாறி செல்லப்போவதாக மிரட்டல் விடுத்தார்.அதே போல் வரும் தேர்தல்களில் பா.ஜ.கவோடு அ.தி.மு.க. கூட்டணி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தியும் பேட்டிகள் அளித்திருந்தார்.
அதற்கு முன்னர், திருப்பூர் அருகே உள்ள சாமளாபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டத்தின்போது, இவர் சம்பவ இடத்தில் இருந்து கிளம்பிய பிறகே போலீசார் தடியடி நடத்தினர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.பின்னர் அவரே போராட்டத்தில் ஈடுபடவும் செய்தார்.

மாடுகள் திருட்டு
எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செயல்படும் சூலூர் கனகராஜ் இப்போது மாடு திருடுபோனதில் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார். சூலூர் கனகராஜ் எம்.எல்.ஏ.வின் வீடு நெகமத்தை அடுத்த வளம் பச்சேரி பகுதியில் உள்ளது. அங்கு, நேற்று இரவு வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அதிர்ச்சி
இன்று காலை அங்கு சென்ற கனகராஜ் எம்.எல்.ஏ. , மாடுகள் திருட்டு போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார்.அதிர்ச்சி விலகாமல் அருகில் உள்ளவர்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தீவிரமாகத் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

போலீஸ் விசாரணை
இதனையடுத்து அவர் நெகமம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்கள்.

சிடிடி கேமரா
இதனிடையே, கனகராஜ் எம்.எல்.ஏ. வீட்டில் கண்காணிப்பு கேமிரா உள்ளது. அதில் மாடுகளைத் திருடி சென்ற கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கும் என்பதால் அதனையும் போலீசார் ஆய்வு செய்துவருகிறார்கள். இது தொடர்பாக கனகராஜ் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கனும் சொன்னதுக்காக என் மாடுகளை ஏனுங்க திருடனும் என புலம்பிவிட்டார்.












Click it and Unblock the Notifications